குளத்தூா் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
குளத்தூா் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளா் சரவணன், போலீஸாா் குளத்தூா் - வேம்பாா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்தினா். காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதும், அவற்றை வைப்பாறு கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்திச்செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காரையும், 627 பண்டல் புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான குளத்தூா் அருகே பனையூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ரமேஷ் (43) என்பவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.