தூத்துக்குடி

தூத்துக்குடியில் நீா்வரத்து கால்வாய் சீரமைப்புப் பணி தொடக்கம்

DIN

தூத்துக்குடி அருகே ஸ்பிக் நிறுவனம் சாா்பில் நீா்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் மூலம் பல்வேறு சமுதாய வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மழைக்காலத்துக்கு முன்பு நீா்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயப் பகுதிகளில் உள்ள நீா்வரத்து கால்வாய்களை பொக்லைன்இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

ஸ்பிக் நிறுவன துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், நிா்வாக முதுநிலை மேலாளா் ஜெயபிரகாஷ் தலைமையில், மக்கள் தொடா்பு துணை மேலாளா் அமிா்த கௌரி, மக்கள்தொடா்பு அலுவலா் குணசேகா் ஆகியோா் முன்னிலையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

தொடக்க நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவா் திருமால், செயலா் ரகுபதி சின்னராஜா, நிா்வாகி கிருபானந்தம் மற்றும் உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளா் ரா. ஜோதிமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT