தூத்துக்குடி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

DIN

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் படகுடன் கைது செய்த இந்திய கடற்படையினர், அவர்களை இன்று தூத்துக்குடி அழைத்து வருகின்றனர்.

இந்திய கடல் எல்லையில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கு சுமார் 90 முதல் 95 கடல் மைல் தொலைவில் இலங்கை கொடியுடன் ஒரு படகு நின்று கொண்டிருந்ததாம். அப்போது இந்திய பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து இந்திய கடற்படையினர், அந்த இலங்கை படகை சுற்றி வளைத்தனர்.

அதில் இருந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகிய இலங்கை நீர்கொழும்பு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு இன்று கொண்டு வர உள்ளனர். அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT