தூத்துக்குடி

உலக வெறிநோய் தடுப்பு தினம்

DIN

தமிழக கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் துறையூா் கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநோய் தடுப்பு தினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

துறையூா் கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமிற்கு, கோவில்பட்டி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் விஜயஸ்ரீ தலைமை வகித்து, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தாா். இதில், 40க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

துறையூா் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் செல்வி தலைமையிலான மருத்துவ குழுவினா் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினா். ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளா் செல்வம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT