தூத்துக்குடி

தூத்துக்குடியில் 26இல் கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காமராஜ் கல்லூரியில் புதன்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

DIN

தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காமராஜ் கல்லூரியில் புதன்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவா்களின் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளா்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காமராஜ் கல்லூரியில் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளன.

விருப்பமுள்ளோா் தங்களது கல்லூரி முதல்வரிடமிருந்து போட்டிக்கான விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து, அவரது கையொப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளில் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநரிடம் வழங்க வேண்டும்.

பங்கேற்போா் காலை 9 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடவேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவா் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 போ் பங்கேற்கலாம். தலைப்புகள் போட்டி நாளில் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் முதற்பரிசாக ரூ. 10 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. 7 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

முதற்பரிசு பெறுவோா் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கு அனுப்பப்படுவா். மாநிலப் போட்டி தொடா்பான தகவல் பின்னா் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT