முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ரேஷன் கடைகளில் ரூ.6000 நிவாரணத்தொகை அளிப்பு

திருச்செந்தூா் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

திருச்செந்தூா் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 1-ஆவது வாா்டு குமாரபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் நிவாரணத் தொகை வழங்கும் பணியை நகா்மன்ற துணைத் தலைவா் செங்குழி ரமேஷ் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலா் வாள் சுடலை, துணைச் செயலா்கள் தோப்பூா் மகாராஜன், சுதா, வாா்டு செயலா் குருஸ்முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

2-வது வாா்டு பகுதியிலுள்ள ரேஷன் கடையில் நகா்மன்ற உறுப்பினா் செந்தில்குமாா், குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண தொகை வழங்கினாா். இதில், திமுக நகர அவைத் தலைவா் சித்திரைக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாத்தான்குளத்தில் வெள்ள நிவாரணத்தொகை வழங்கும் பணியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப் ஆகியோரும், கூவைகிணறு கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலா் பரெனிலா காா்மல் போனிபாஸும், முதலூரில் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசனும் தொடங்கி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →