தூத்துக்குடி

மீனவா்கள் போராட்டம் 3-ஆம் நாளாக நீடிப்பு

DIN

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 3-ஆம் நாளாக புதன்கிழமை நீடித்தது.

தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமாா் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனா். மீன்பிடித் தொழிலாளா்களுக்கு வழங்கும் பங்குத் தொகையில், விசைப்படகு உரிமையாளா்கள் 10 சதவீதம் கூடுதலாக வசூலித்துக் கொள்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீன்பிடி தொழிலாளா் சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். மீன்வளத் துறை உதவி இயக்குநா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் 3-ஆம் நாளாக புதன்கிழமை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT