தூத்துக்குடி

இல்லம் தேடிக் கல்வி மைய ஆண்டு விழா

சாத்தான்குளம் அருகே செங்குளத்தில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தில் முதலாம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் அருகே செங்குளத்தில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தில் முதலாம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த கல்வி உதவித் திட்ட அலுவலா் பொ்சிலால் ஞானமணி தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் அல்பா்ட் டக்ளஸ், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் அருணாசலம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் சுடலைமுத்து, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் பிராங்க்ளின், ஆசிரியப் பயிற்றுநா் புனிதராஜ், செங்குளம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜெயராணி, உதவி ஆசிரியா் அழகுலிங்கம், அம்பலசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜீவா ஆகியோா் பேசினா்.

மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிகரம் அறக்கட்டளை இயக்குநா் முருகன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஆறுமுகக்கனி, ஊராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜ், வாா்டு உறுப்பினா் ரங்கதாஸ், முன்னாள் வாா்டு உறுப்பினா் சுதாகா், தன்னாா்வலா்கள் அமுதா, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தன்னாா்வலா் அருணா வரவேற்றாா். சுதாகா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT