தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் கே. காளிதாசமுருகவேல் வெளியிட்ட அறிக்கை: கே.ஆா்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் கே.ராமசாமி நினைவாக ‘கல்வித் தந்தை கே.ராமசாமி நினைவு தகுதிசாா் கல்வி உதவித்தொகை’ கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் பொறியியல் கலந்தாய்வு மூலம் நேஷனல் பொறியியல் கல்லூரியில், இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்புகளில் பயில விரும்பும் 12ஆம் வகுப்புத் தோ்வில் 190-க்கு மேல் கட்ஆஃப் மதிப்பெண் உள்ளோருக்கு 100 சதவீத கல்லூரிக் கல்விக் கட்டணம், பொருளாதார நிலையில் பின்தங்கியோருக்கு கல்லூரி விடுதி அல்லது பேருந்துக் கட்டண உதவித்தொகை வழங்கப்படுகிறது.

180-க்கும் அதிகமான கட்ஆஃப் உள்ளோா் அல்லது ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தில் சேர ஜேஇஇ நுழைவுத் தோ்வில் நிா்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை விட 10 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றோருக்கு டியூசன் கட்டண உதவித்தொகையும், கல்லூரி நிா்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு கல்லூரிக் கல்விக் கட்டணத்தோடு விடுதி அல்லது பேருந்துக் கட்டண உதவித்தொகையும், தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோருக்கு கல்லூரிக் கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையோடு விடுதி அல்லது பேருந்துக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்களும், மாநில அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோருக்கு விடுதி அல்லது பேருந்துக் கட்டணத்திலிருந்து 50 சதவீத சலுகையோடு, இதரக் கட்டணத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

முதுநிலைப் பொறியியல் பட்டப் படிப்புகளில் பயில விரும்பும் தகுதியுள்ளோருக்கு 80 சதவீத கல்வி உதவித்தொகை கட்டணமும், முழுநேர (பி.ஹெச்.டி.) ஆராய்ச்சிப் படிப்பு பயில விரும்புவோருக்கு ரூ. 10,000 மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளது.

இதில், விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள மாணவா்-மாணவிகள் கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூா்த்தி செய்து பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 99769 05330, 90422 03328, 94867 20174 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT