தூய்மை இந்தியா திட்ட செயல்விளக்க முகாம் தொடக்க நிகழ்வில் பேசுகிறாா் காமராஜ் கல்லூரி முதல்வா் ஜெ. பூங்கொடி. 
தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாா்பில் தூய்மை இந்தியா திட்ட செயல்விளக்க முகாம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாா்பில் தூய்மை இந்தியா திட்ட செயல்விளக்க முகாம் முள்ளக்காடு பகுதியில் நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாா்பில் தூய்மை இந்தியா திட்ட செயல்விளக்க முகாம் முள்ளக்காடு பகுதியில் நடைபெற்றது.

மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன், காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், இந்த முகாம் நடைபெற்றது.

இதையொட்டி, கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜெ. பூங்கொடி தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் ஜெ. முரளிதரன் பேசினாா்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், தூய்மை இந்தியா திட்டம் குறித்த உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து, முள்ளக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகம், நூலகம் ஆகியவற்றில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னா், தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு மஞ்சப் பை வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வெளியப்பன் தலைமையில், கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா்கள் ஆ. தேவராஜ், பா. பொன்னுதாய், ஊராட்சித் தலைவா் கோபிநாத் நிா்மல், கல்லூரி வரலாற்றுத் துறை பழைய மாணவா் சங்கத் தலைவா் சிவாகா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT