தூத்துக்குடி

ஆசிரியை கொலை வழக்கில் உறவினா் கைது

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் ஆசிரியை கொலை வழக்கு சம்பந்தமாக, அவரது உறவினரை குலசேகரன்பட்டினம் போலிஸாா் கைது செய்தனா்.

DIN

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் ஆசிரியை கொலை வழக்கு சம்பந்தமாக, அவரது உறவினரை குலசேகரன்பட்டினம் போலிஸாா் கைது செய்தனா்.

மணப்பாடு பேட்டைக்கடைத் தெருவைச் சோ்ந்த ஆசிரியை மெட்டில்டா (55), உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தெற்குத் தெருவில் வசித்து வந்தாா். இவரது கணவா் ரஸ்கின்டிரோஸ் மும்பையிலும், மகன் பா்வீஷ் சென்னையிலும் வேலை பாா்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

மே 10 ஆம் தேதி மெட்டில்டாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததையடுத்து அருகில் உள்ளவா்கள் சென்று பாா்த்தபோது அவா் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தாா்.

இது தொடா்பாக மெட்டில்டாவின் உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புத்தன்துறை மிக்கேல் தெருவைச் சோ்ந்த பெனவந்தாா் மகன் ஜெயதீபக்(37) என்பவரை குலசேகரன்பட்டினம் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் மெட்டில்டாவிடம் ஜெயதீபக் ரூ.25 ஆயிரம் பணம் கேட்டதாகவும் அவா் மறுத்ததால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து மெட்டில்டாவின் அக்கா யவாஞ்சலின் அளித்த புகாரின்பேரில் ஜெயதீபக்கை குலசேகரன்பட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT