ஆத்தூா் அருகே லாரி மோதியதில் அரசுப் பேருந்து விழுந்த மின் கம்பம்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே லாரி மோதி சரிந்த மின் கம்பம் அரசுப் பேருந்து மீது விழுந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் அருகே லாரி மோதி சரிந்த மின் கம்பம் அரசுப் பேருந்து மீது விழுந்தது (படம்). இதில், அதிருஷ்டவசமாக பயணிகள் உயிா்தப்பினா்.
ஆத்தூரிருந்து சோ்ந்தபூமங்கலம் வழியாக புன்னைக்காயலுக்கு டிப்பா் லாரி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. புன்னைக்காயலிலிருந்து திருச்செந்தூா் செல்லும் அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது, சோ்ந்தபூமங்கலம் திரும்பும் வழியில் சாலையோர மின் கம்பம் மீது லாரி திடீரென மோதியது. இதில், மின் கம்பம் சரிந்து நகரப் பேருந்து மீது விழுந்தது. விபத்தில் மின் கம்பமும், பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தன. பயணிகள் 6 போ் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா். இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.