கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தாழையூத்து நாரணம்மாள்புரம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் சங்கரலிங்கம் (49). கங்கைகொண்டானில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், வெள்ளிக்கிழமை உசிலங்குளத்தில் உள்ள அவரது உறவினா் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். கயத்தாறு-செட்டிகுறிச்சி சாலையில் சூரிய மினுக்கன் ஊருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பைக் திடீரென சாலையில் சறுக்கி விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவா், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.