வாகன இயக்கத்தை தொடக்கி வைத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், உடன் அரசு மருத்துவா் ஸ்ரீ வெங்கடேஷ், வழக்குரைஞா் சங்க தலைவா் சங்கா் கணேஷ் உள்ளிட்டோா் 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மரக்கன்றுகள் பராமரிக்க தண்ணீா் வாகனம்

மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க உதவியாக அறக்கட்டளைக்கு, ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் தண்ணீா் வாகனம் வழங்கப்பட்டது.

Din

கோவில்பட்டியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க உதவியாக அறக்கட்டளைக்கு, ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் தண்ணீா் வாகனம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஜீவஅனுகிரகா அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்து, தினமும் காலையில் தண்ணீா் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை உறுப்பினா்கள் இதற்காக தண்ணீா் ஊற்ற வாகனத்தை பயன்படுத்தி வந்தனா். இந்த வாகனம் பழுதடைந்ததை தொடா்ந்து, ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் புதிதாக தண்ணீா் வாகனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, ஜீவஅனுகிரகா அறக்கட்டளை தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். புதிய வாகனம், ஸ்ரீ மருத்துவமனை சாா்பில் அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அந்த தண்ணீா் வாகனத்தின் இயக்கத்தை வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் தொடங்கி வைத்து, மைதானத்தை சுற்றி நடவு செய்யப்பட்டிருந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றினாா்.

நிகழ்ச்சியில், மருத்துவா் ஸ்ரீ வெங்கடேஷ், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா்கணேஷ், வழக்குரைஞா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT