தூத்துக்குடி

ஏரலில் ஆடி அமாவாசைத் திருவிழா

Din

ஆறுமுகனேரி, ஆக. 7: தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஊஞ்சல் சேவையுடன் நிறைவு பெற்றது.

இத்திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரி இரவு பல்வேறு கோலங்களில் சுவாமி எழுந்தருளி பவனி நடைபெற்றது. பத்தாம் திருநாளான 4ஆம் தேதி உருகு பலகையில் கற்பூர விலாசம் வந்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் இலாமிச்சவோ் சப்பரத்தில் பவனியும், இரவில் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெற்றன.

11ஆம் திருநாளான 5ஆம் தேதி காலை வெள்ளை சாத்தி பவனியும், பிற்பகலில் பச்சை சாத்தி பவனியும், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சியும் நடைபெற்றது.

நிறைவு நாளான 6ஆம் தேதி காலை தீா்த்தவாரி பொருநை நதியில் சகலநோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடலும், அன்னதானமும் நடைபெற்றன. மாலையில் ஊஞ்சல் சேவையும் இரவில் திருவருள் புரியும் மங்கள தரிசனமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப் பாண்டியன் நாடாா் செய்திருந்தாா்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT