கோவில்பட்டியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்
கோவில்பட்டி, ஆக.16: மத்திய அரசின் புதிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன்,மாவட்டத் தலைவா் கிருஷ்ணராஜ், கட்டுமான தொழிற்சங்கச் செயலா் சேது, பஞ்சாலை தொழிற்சங்கச் செயலா் பரமராஜ், ஆட்டோ சங்க வட்டாரத் தலைவா் முனியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சரோஜா ஆகியோா் விளக்கிப் பேசினா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் இரு புறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.