தெற்காத்தூரில் சாலையில் வாகனம் கொட்டிச் சென்ற உப்பை மக்கள் அள்ளிச் சென்றனா்.
தெற்காத்தூா் திரையரங்கிலிருந்து தெற்காத்தூா் வெற்றிலை வியாபாரிகள் சங்கம் வரை அளவுக்கு அதிகமாக உப்பு ஏற்றி வந்த லாரியிருந்து உப்புகள் கீழே கொட்டி கிடந்ததால் பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனா். மேலும் வாகனங்கள் உப்பு கொட்டி கிடக்குமிடத்திலிருந்து விலகிச் செல்வதால் சிரமத்திற்குள்ளாகினா்.
இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் உப்பை ஒரு ஓரமாக அகற்றி போக்குவரத்துக்கு வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனா். இம்மாதிரி அதிக பாரம் ஏற்றியும் மூடாமலும் பொருள்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்குமாறுத்து வாகனங்கள் மேல் தாா் பாய் போட்டு செல்ல அறிவுறுத்த வேண்டும்.