பேரணியைத் தொடக்கிவைத்த பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி. 
தூத்துக்குடி

நாசரேத்தில் கண் தான விழிப்புணா்வுப் பேரணி

Din

தேசிய கண் தான விழிப்புணா்வு வாரத்தையொட்டி, நாசரேத்தில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பேரணிக்கு, சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபக்குமாா் தலைமை வகித்தாா்.

நாசரேத் வணிகா் சங்கத் தலைவா் ஜெபஸ் திலகராஜ், செயலா் செல்வன், பொருளாளா் அகிலன், லயன்ஸ் கிளப் தலைவா் ஜான்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல் நிலையம் அருகேயுள்ள சீரணி கலையரங்கத்தில் இப்பேரணியை பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி தொடக்கிவைத்தாா். ரயில்வே பீடா் சாலை, மா்காஷிஸ் சாலை, சந்தி வழியாக மா்காஷிஸ் பள்ளி மைதானத்தை பேரணி அடைந்தது.

கண் தானத்தின் அவசியம், அகா்வால் கண் மருத்துவமனையில் உலகத் தரத்தில் தையல் இல்லா கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுவது உள்ளிட்டவை குறித்து மருத்துவமனையின் மருத்துவா் பிரேம்குமாா் ஜோசப் பேசினாா்.

பேரணியில் மா்காஷிஸ் கலை -அறிவியல் கல்லூரி, லூகாஸ் சமுதாய நா்சிங் கல்லூரி, மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா், அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மருத்துவமனை துணைப் பொது மேலாளா் பிரபு, மேலாளா்கள் காட்வின் சந்திரசேகா், கோமதிநாயகம், பேச்சிமுத்து, மருத்துவா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

அருணாச்சலம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு முர்மு வாழ்த்து!

அமெரிக்கா - ஈரான் பதற்றம்! இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்!

ஓடிடியில் வெளியானது ஹாட் ஸ்பாட் - 2!

செவ்வாய் தோஷமா? தீராத நோயா?... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

ஓடிடியில் நேரடியாக வெளியான ஜிவி பிரகாஷின் லக்கி திரைப்படம்!

SCROLL FOR NEXT