முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் பள்ளியில் ’மிஷன் இயற்கை’ திட்ட சிறப்பு நிகழ்ச்சி

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை திட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:39 PM
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

உடற்கல்வி ஆசிரியா் தனபால் நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளா் சுதாகா், உதவி தலைமை ஆசிரியா்கள் சாரா ஞானபாய், சாா்லஸ் திரவியம்,தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் அம்புரோஸ் சுகிா்தராஜ், தேசிய மாணவா் படை அலுவலா் சுஜித் செல்வ சுந்தா் ஆகியோா் செய்திருந்தனா்.

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை திட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் குணசீலராஜ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனத் துறையின் இயக்குநா் ஜாண் சாமுவேல் முன்னிலை வகித்தாா். இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் வரவேற்றாா்.

தமிழ்நாடு பனைத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் காட்சன் சாமுவேல் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்றாா். பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரிப்பது குறித்து மாணவா்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குநா் பெலின் பாஸ்கா், ஓவியக்கலை ஆசிரியா் அலெக்ஸன் கிறிஸ்டோபா், தேசிய பசுமை படை மற்றும் பசுமை மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.