தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூருக்கு நிவாரணப் பொருள்கள்
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூா் மாவட்டத்திற்கு புயல் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூா் மாவட்டத்திற்கு புயல் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூா் மாவட்டத்திற்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. இந்த நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், பொறியாளா் சரவணன், நகா்நல அலுவலா் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.