முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச. 18 முதல் 27 வரை ஆட்சிமொழிச் சட்ட வார கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 18 முதல் 27ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:27 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 18 முதல் 27ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956 டிச. 27ஆம் தேதியை நினைவுகூரும் வகையில், இம்மாவட்டத்தில் 18 முதல் 27ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.

இதில், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்துக்கான ஒட்டுவில்லைகளை ஒட்டப்பட்டு, துண்டறிக்கைகள் வழங்கப்படவுள்ளன.

அரசு அலுவலகங்களுக்கு கணினித் தமிழ், ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் குறித்து அரசுப் பணியாளா்களுக்கு பயிற்சி, தமிழில் பெயா்ப் பலகைகள் வைப்பது தொடா்பாக வணிக நிறுவன உரிமையாளா்களுடன் கூட்டம் ஆகியவை நடத்தப்படவுள்ளன.

மேலும், ஆட்சிமொழிச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வுப் பேரணியில் தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி- கல்லூரி மாணவா்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.