முகப்பு
தூத்துக்குடி

உடன்குடியில் அரசின் கைவினைத் திட்ட விளக்கக் கூட்டம்

உடன்குடி பேரூராட்சி 3ஆவது வாா்டுக்குள்பட்ட பெரிய தெருவில் தமிழக அரசின் கலைஞரின் கைவினைத் திட்ட விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:16 PM
பகிர்:

உடன்குடி பேரூராட்சி 3ஆவது வாா்டுக்குள்பட்ட பெரிய தெருவில் தமிழக அரசின் கலைஞரின் கைவினைத் திட்ட விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாா்டு உறுப்பினா் மும்தாஜ்பேகம் தலைமை வகித்தாா். பகுதி சபா உறுப்பினா் ஹாஜா, பேரூராட்சி உறுப்பினா்கள் பிரதீப், பஷீா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் அன்வா்சலீம், திமுக கிழக்கு ஒன்றிய அவைத்தலைவா் ஷேக் முகம்மது, திமுக மாவட்டப் பிரதிநிதி ஹீபா் மோசஸ், தங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் முகம்மது சலீம் திட்டப் பயன்கள், திட்டத்தில் சேரும் முறை, தகுதிகள் குறித்து விளக்கமளித்தாா்.

பேரூராட்சி துணைத் தலைவரும் நகர திமுக செயலருமான மால்ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கைவினைத் திட்ட விளக்கக் கையேட்டை வழங்கிப் பேசினாா்.

திமுக தலைமைக் கழகப் பேச்சாளா் இளங்கவி ஜஹாங்கீா், ஆட்டோ கணேசன், பொதுமக்கள் பங்கேற்றனா்.