தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை
தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சோ்ந்தவா் தேம்பாவணி (50). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 மகன்கள், மகள் உள்ளனா்.
தேம்பாவணி சில நாள்கள் இரவு நேரங்களில் முத்தையாபுரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகேயுள்ள பிள்ளையாா் கோயில் வாசலில் தூங்குவாராம்.
இந்நிலையில், புதன்கிழமை காலை கோயிலைத் திறக்க பூசாரி வந்தபோது, தேம்பாவணி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், முத்தையாபுரம் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, குற்றவாளிகளைத் தேடிவருகின்றனா்.