முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கு

Updated On : 17 பிப்ரவரி 2024, 10:57 pm IST
பகிர்:

கோவில்பட்டி, பிப். 17: கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் புள்ளியல் துறை, மின்னணுவியல் துறை, ஆரோக்கியக் கழகம் ஆகியவை சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைப் பேராசிரியா் ஜெயபாரதி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி நெல்லை கேன்சா் கோ் சென்டா் மருத்துவா் அபிராமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புற்றுநோய்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், உணவு முறைகள், பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசினாா். மாா்பக, வாய்ப் புற்றுநோய்களைத் தாமே கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து செவிலியா் தங்கம்மாள் எடுத்துரைத்தாா். மாணவிகளின் கேள்விகள், சந்தேகங்களுக்கு மருத்துவக் குழுவினா் பதிலளித்தனா். கருத்தரங்கில் இளநிலை, முதுகலை மாணவிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை புள்ளியியல் துறைத் தலைவா் சாரதாதேவி, மின்னணுவியல் துறைத் தலைவா் சங்கா்கணேஷ், ஆரோக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயபிரியா, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.