முகப்பு
தூத்துக்குடி

காா் மோதியதில் மூதாட்டி பலி

காா் மோதியதில் மூதாட்டி பலி

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 4:39 AM
பகிர்:

கயத்தாறு அருகே காா் மோதியதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா கழனீா்குளம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா மனைவி வேலம்மாள் (60). இவா் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊருக்கு திரும்பினாராம். அப்போது திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சவலாப்பேரி விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, வேலம்மாள் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப்பதிந்து காா் ஓட்டுநா் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சோ்ந்த மோகன்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.