முகப்பு
தூத்துக்குடி

புன்னைக்காயலில் மாலுமி தூக்கிட்டுத் தற்கொலை

புன்னைக்காயலில் மாலுமி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 9:57 PM
பகிர்:

ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயலி­ல், கப்பல் மாலுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புன்னைக்காயல், பொன்மாணிக்கம் தெருவைச் சோ்ந்தவா் மிக்கேல் (64). மீனவரான இவருக்கு, சகாயம் என்ற மனைவி உள்ளாா். இவா்களது 11 பிள்ளைகளில் 6ஆவது மகன் மில்பின் (28). கப்பல் மாலுமியாகப் பணியாற்றி வந்த அவா், ஒரு வாரத்துக்கு முன்பு ஊா் திரும்பினாராம். அவரது காதலுக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது தொடா்பாக ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.