முகப்பு
தூத்துக்குடி

காயாமொழி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Updated On : 4 ஜூலை, 2024 at 7:04 PM
பகிர்:

திருச்செந்தூா், ஜூலை 4:

திருச்செந்தூா் அருகே காயாமொழி, தேரிக்குடியிருப்பில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை, டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா். மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மெட்டில்டா முன்னிலை வகித்தாா்.

ஆசிரியா் பயிற்றுநா் ஜெகதீஷ் பெருமாள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். முகாமில் 420 மாணவா்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், ஆசிரியா்கள், அறக்கட்டளை அலுவலா்கள், கிராம மக்கள் பங்கேற்றனா்.

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் வத்சலா வரவேற்றாா். ஏற்பாடுகளை அறக்கட்டளைக் கள இயக்குநா் நந்தகோபால், கோபி, வீரமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.