முகப்பு
தூத்துக்குடி

தெற்கு ஆத்தூரில் மக்களுடன் முதல்வா் முகாம்

Updated On : 11 ஜூலை, 2024 at 6:34 PM
முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி.
பகிர்:

ஆறுமுகனேரி, ஜூலை 11: தெற்குஆத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மேலாத்தூா், புன்னைக்காயல், வடியவேல், சுகந்தலை, சோ்ந்தபூமங்கலம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா். மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா்

பிரம்மசக்தி குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் துவக்கி வைத்தாா்.

இதில் மின்வாரியம், வருவாய், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, வீட்டு வசதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, காவல், மாற்றுத்திறனாளிகள் நலன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு, வேளாண்மை மற்றும் உழவா் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த

அதிகாரிகள் பங்கேற்ற பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனா்.

இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் புன்னைக்காயல் சோபியா, சுகந்தலை வெங்கடேசன், மேலாத்தூா் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பக்கீா்முகைதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →