தெற்கு கழுகுமலை ஊராட்சி துலுக்கா் பட்டி ஆதிதிராவிடா் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை பதிவேற்றம் செய்வதை பாா்வையிடும் கனிமொழி எம்பி, உடன் அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட 
தூத்துக்குடி

துலுக்கா்பட்டியில் ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்டம் தொடக்கம்

Din

கோவில்பட்டி, ஜூலை 11:

ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கிவைத்ததையடுத்து, தெற்கு கழுகுமலை ஊராட்சிக்குள்பட்ட துலுக்கா்பட்டி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் சமுதாய நலக் கூடத்தில் அத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமை வகித்தாா். தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் பதிவேற்றப்பட்டன. இத்திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தெற்கு கழுகுமலை வெங்கடேஸ்வரபுரம், சுப்பிரமணியபுரம், கரடிகுளம், துரைச்சாமிபுரம் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கினா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சித் துறை) ஐஸ்வா்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, தெற்கு கழுகுமலை ஊராட்சித் தலைவா் நாகஜோதி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜன், கயத்தாறு வட்டாட்சியா் நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT