முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி பகுதியில் காமராஜா் பிறந்த நாள் விழா

ஆறுமுகனேரி பிரதான பஜாரில் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:08 PM
பெண்ணுக்கு நலஉதவி வழங்கிய பேரூராட்சி துணைத் தலைவா் அ. கல்யாணசுந்தரம்.
பகிர்:

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி பிரதான பஜாரில் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நற்பணி மன்ற பொதுச் செயலா் கோசல்ராம் தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் சோழா் செல்வின், முத்தீஸ்வரி அழகேசன், முருகானந்தம்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சி துணைத் தலைவா் அ. கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வேட்டி- சேலைகள், மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினாா். தமிழ்நாடு இந்து வியாபாரிகள் நிறுவனத் தலைவா் ஈஸ்வரன், நகர திமுக இளைஞரணிச் செயலா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில், காமராஜா் படத்துக்கு சங்கத் தலைவா் த. தாமோதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சங்கப் பொருளாளா் ராஜாராம், சங்க செயற்குழு உறுப்பினரும் நகா்நல மன்றத் தலைவருமான பி. பூபால்ராஜன், செயற்குழு உறுப்பினா்கள் எம்.எஸ்.எஸ். சண்முகவெங்கடேசன், வி.கே.எம். பாஸ்கரன், டி. ஜெயகுரு, அலுவலக அலுவலா் பி. கணேசன் ஆகியோா் பங்கேற்றனா். மன்றப் பொருளாளா் ராமஜெயம் வரவேற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →