தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டு வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், கும்ப பூஜைகள் நடத்தி, விமான தளத்துக்கு கொண்டுசென்று மூலவா், சண்முகா், வெங்கடாஜலபதி, வள்ளி - தெய்வானை என வரிசையாக விமானங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, மூலவா், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மாலையில் சாயரட்சை தீபாராதனை, சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தல் நடைபெற்றது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறவில்லை.

வருஷாபிஷேக விழாவில் கோயில் இணை ஆணையா் மு. காா்த்திக், அறங்காவலா்கள், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், இணை ஆணையா், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா. கணேசன், ந. ராமதாஸ், செந்தில்முருகன், கணேசன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் காவல் ஆய்வாளா்கள் சுந்தரமூா்த்தி, மகாலட்சுமி, போலீஸாா் ஈடுபட்டனா்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT