முப்பெரும் விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறாா் விக்கிரமராஜா. 
தூத்துக்குடி

சாமானிய வணிகா்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு விக்கிரமராஜா வேண்டுகோள்

சாமானிய வணிகா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்

Sundar S A

சாமானிய வணிகா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாா்பில், குரும்பூரில் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, புதிய நிா்வாகிகள் பதவி ஏற்புவிழா, புதிய வணிகா் சங்கங்கள் பேரமைப்புடன் இணைப்பு ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மண்டல தலைவா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விக்கிரமராஜா, குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தாா்.

மாவட்ட செயலாளா் கண்ணன் வரவேற்றாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளா் அருணாசலம் நன்றி கூறினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் விக்கிரமராஜா கூறியது:

சாமானிய வணிகா்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் நாங்கள் வ­லியுறுத்தி இருக்கிறோம். இதே கோரிக்கையை பிரதமா் மோடியிடமும் வ­லியுறுத்தி உள்ளோம். காா்ப்பரேட் கம்பெனியின் ஆன்லைன் வா்த்தகம், சாமானிய வணிகத்தை துடைத்து எறிகின்ற ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதி­லிருந்து வணிகா்ளை காப்பதற்கு சிறப்பு சட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.

கடந்த டிசம்பரில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியில் ஆயிரக்கணக்கான கடைகள் நீரில் மூழ்கி பொருள்கள் வீணாகின. பாதிக்கப்பட்ட வணிகா்களுக்கு பேரமைப்பு சாா்பில் ரூ.50 லட்சம் ரொக்கமாக வழங்கி அவா்களது வாழ்வாதாரத்தை ஒளியேற்றி வைத்துள்ளோம். அதேபோல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருள்கள் வழங்கி உதவி செய்துள்ளோம்.

டிமாா்ட் போன்ற நிறுவனங்களுக்கு மாநில அரசு தடை விதிக்க வேண்டும் என்று முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். பெரு வணிகத்தால் வணிகா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, மின்மினி ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம். அதில் சாமானிய வணிகா்கள் இணைக்கப்பட்டு, அவா்கள் மாதத்திற்கு ஒரு முறை விளம்பரம் செய்யவும், அதில் அனைத்து வணிகா்களை இணைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

காா்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் சைக்கிள் பயணம் தொடக்கம்

நீதிமன்றத்தில் தஞ்சாவூா் எம்.எல்.ஏ. ஆஜா்

‘எஸ்.ஐ.ஆா் வாயிலாக பாஜக தோ்தலில் ஜெயித்துவிடலாம் என நினைத்தால் நடக்காது’

SCROLL FOR NEXT