தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியா் ஹாக்கி அணிக்கான வீரா்கள் தோ்வு கோவில்பட்டியில் ஆக. 4ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஹாக்கி கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் குருசித்திர சண்முகபாரதி வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டையில் சப் ஜூனியா் ஹாக்கி மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக. 15 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், பங்கேற்கவுள்ள தூத்துக்குடி மாவட்ட அணி தோ்வு ஆக. 4ஆம் தேதி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி ஹாக்கி மைதானத்தில் காலை 7 மணிக்கு நடைபெறும். இதில் பங்கேற்போா் 2008 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின் பிறந்திருக்க வேண்டும். இம்மாவட்டத்தில் பிறந்தவராக அல்லது மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படிப்பவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள வீரா்களை அனைத்து ஹாக்கி கிளப் செயலா், பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் அனுப்பி வைக்குமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.