உடன்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் சிைண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மணிகண்டன் (28).
இவா் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குலசேகரன்பட்டினம் போலீஸாரால் கடந்த 2018ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.