முகப்பு
தூத்துக்குடி

கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து கோவில்பட்டியில் இளைஞா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்

Updated On : 25 ஜூன், 2024 at 7:46 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:

கோவில்பட்டியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக முழுவதும் போதைப் பொருள்கள், கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் நகரச் செயலா் விஜயலட்சுமி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கோவில்பட்டி நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், நகரத் தலைவா் ரஞ்சனி கண்ணம்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கரும்பன், துணைச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் பரமராஜ், நகரச் செயலா் சரோஜா, இந்திய மாதா் தேசிய சம்மேளனம் தூத்துக்குடி மாவட்டச் செயலா் திலகவதி ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் ஜோசப், நகரத் துணைச் செயலா் முனியசாமி, அலாவுதீன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →