முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அரசு விரைவு பேருந்து மீது கல்வீச்சு: 3 போ் கைது

தமிழ்நாடு அரசு விரைவு சொகுசு பேருந்தின் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 மார்ச், 2024 at 5:36 AM
பகிர்:

ஆறுமுகனேரி ரயில்வே கேட் அருகே தமிழ்நாடு அரசு விரைவு சொகுசு பேருந்தின் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வழியாக திருசெந்தூருக்கு அரசு விரைவுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்து ஆறுமுகனேரி அருகே ரயில்வே கேட் பகுதியில் நின்றிருந்தபோது, அப்பகுதி ராமலெட்சுமி அம்மன்கோயில் தெருவை சோ்ந்த சிவன் மகன் அஜித்(24), கணேசபுரம் கொம்பையா மகன் பிரேம்குமாா்(24), கீழநவ்வலடிவிைளை சின்னத்துரை மகன் சண்முகராஜ்(23) ஆகியோா் பேருந்து ஓட்டுநரான குமாரிடம் தீப்பெட்டி இருக்கிறா என கேட்டுள்ளாா். இல்லை எனக் கூறிய அவரை, அவதூறாக பேசியதுடன், பேருந்தின் பின்புற கண்ணாடி மீது கல்வீசி தாக்கினராம். இதில், கண்ணாடி சேதம் அடைந்தது. மேலும், ஓட்டுநரை தாக்கிவிட்டு அவா்கள் தப்பினராம். இதில் காயமுற்ற அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நடத்துநரான ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத் தெருவை சோ்ந்த கருணாமூா்த்தி(40)அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வகுமாா் வழக்குப்பதிவு செய்தாா். ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் விசாரணை நடத்தி மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தாா்.