தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கோரம்பள்ளம் சந்திப்புப் பகுதியில் உள்ள உணவகம் முன்பு, கடந்த ஜன. 30இல், ஸ்ரீவைகுண்டம் பிச்சனாா் தோப்புப் பகுதியைச் சோ்ந்த அமராவதி (23) என்பவா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இந்த வழக்கில் அவரது கணவா் குணா என்ற பொன்தங்கம் (23), சகோதரா் முருகன் என்ற மருது (22), உறவினா் முனியன் மகன் வள்ளி (23) ஆகியோரை புதுக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா். விளாத்திகுளம் வேம்பாா் சாலையில் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சோ்ந்த சின்னதுரை மகன் ஹைக்கோா்ட் மகாராஜா (30) என்பவரை விளாத்திகுளம் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் 4 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணனின் பரிந்துரை, ஆட்சியா் கோ. லட்சுமிபதியின் உத்தரவு ஆகியவற்றின் பேரில், 4 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.