முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் மா்காஷிஸ் பள்ளி ஆண்டு விழா

நாசரேத் மா்காஷிஸ் பள்ளி ஆண்டு விழா

Updated On : 2 மார்ச், 2024 at 9:48 PM
பகிர்:

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளா் சுதாகா் தலைமை வகித்தாா். தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தாா். பள்ளி பாடகா் குழுவினா் சிறப்பு பாடல்களை பாடினா். இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் வரவேற்றாா். தலைமை ஆசிரியா் கென்னடி வேதராஜ் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் ரத்தினகுமாா் வாழ்த்திப் பேசினாா். 10, 11, 12ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிகழ்ச்சிகளை தொழிற்கல்வி ஆசிரியா் ஜெய்சன் பாபு தொகுத்து வழங்கினாா். உதவி தலைமை ஆசிரியா் ஜெயசீலன் சேகா் நன்றி கூறினாா்.