பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது
பெண்ணுக்கு மிரட்டல் மகன் கைது
கோவில்பட்டியில் தாயை அவதூறாகப் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த ஆறுமுகத்துரை மனைவி சாந்தி. இவரது மகன் ராஜதுரை (29). மதுப் பழக்கமுடைய ராஜதுரை வியாழக்கிழமை இரவு தாயிடம் பணம் கேட்டாராம். கொடுக்க மறுத்த அவரை ராஜதுரை அவதூறாகப் பேசியதுடன் கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினாராம்; மேலும், கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜதுரையை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.