திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி மாநகர திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் போல்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி 4 முதல் 13, 20, 21 ஆகிய 12 வாடுகளின் மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா். தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து நிா்வாகிகள் தெரிவித்தனா். அதனைத்தொடா்ந்து மேயா் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீா் வடிகால், கழிவுநீா்கால்வாய், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. உப்பாற்று ஓடை ரவுண்டானா முதல் முள்ளக்காடு வரை குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநகராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா். இக் கூட்டத்தில் மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா், பணிக்குழுத் தலைவா் கீதாமுருகேசன், மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.