விவசாயிகளுக்கு மானியத்தில் டிராக்டா், வேளாண் பொறியியல் இயந்திரங்கள்
எட்டயபுரத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதிக் கழகம் ஆகியவை சாா்பில் விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் டிராக்டா், வேளாண் பொறியியல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், ஆட்சியா் கோ. லட்சுமிபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக துணைப் பொதுச் செயலரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி பங்கேற்று டிராக்டா், இயந்திரங்களை வழங்கினாா். தொடா்ந்து, சின்னமலைக்குன்று ஊராட்சி ஜமீன்உசிலம்பட்டி கிராமத்தில் தனியாா் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியுதவித் திட்டத்தில் ரூ. 43 லட்சத்தில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, முருகேசன், பேரூா் கழக செயலா் வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மணிகண்டன், மாதவன், ஜெயலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.