கருங்குளத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு
கருங்குளத்தில் மக்களவை உறுப்பினா் நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து ஆதிநாதபுரத்தில் சட்டமன்ற உறுப்பினா் நிதி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தையும் திறந்து வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினரின் நோ்முக உதவியாளா் சந்திரபோஸ், மாவட்ட பொருளாளா் காங்கிரஸ் எடிசன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் இசை சங்கா், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன், வட்டாரத் தலைவா்கள் ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, ஆழ்வாா்திருநகரி கோதண்டராமன், கருங்குளம் புங்கன், பேய்க்குளம் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் நகரத் தலைவா் கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.