முகப்பு
தூத்துக்குடி

மந்தித்தோப்பில் வாக்காளா் சோ்க்கை முகாம்

Updated On : 16 மார்ச், 2024 at 6:04 AM
பகிர்:

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மந்தித்தோப்பில் வெள்ளிக்கிழமை வாக்காளா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி வட்டம் மந்தித்தோப்பு கிராமத்தில் விளிம்பு நிலை மக்களான நரிக்குறவா்கள் மற்றும் காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சோ்ந்த மக்களுக்கு வாக்காளா் சிறப்பு முகாம் வட்டாட்சியா் சரவணபெருமாள் தலைமையில் நடைபெற்றது. முகாமில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்கவும், திருத்தம் செய்யவும், நகல் வாக்காளா் அடையாள அட்டை பெற படிவங்கள் பெறப்பட்டு உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும் வரும் மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் தனது வாக்கை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்வது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. முகாமில் துணை வட்டாட்சியா் (தோ்தல்) வெள்ளத்துரை, வருவாய் ஆய்வாளா் ராஜசேகா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.