வட்டன்விளை பள்ளியில் ஆண்டு விழா
Updated On : 22 மார்ச், 2024 at 6:36 PM
உடன்குடி அருகே வட்டன்விளையில் உள்ள வி.வி.பெருமாள் தொடக்கப் பள்ளியில் 69ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளிச் செயலரும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவருமான வி.பி. ஜெயக்குமாா் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். ஊா் நலப் பிரமுகா்கள் ஆறுமுகநயினாா், செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊா் நலப் பிரமுகா்கள் ஹரிதாஸ், கதிரேசன், மாணவா்-மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா். தலைமையாசிரியை தேவகி ரஜினி வரவேற்றாா். உதவி ஆசிரியை சரசு நன்றி கூறினாா்.