முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

Updated On : 31 மார்ச், 2024 at 6:40 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 7:00 PM

தொடா் விடுமுறையையடுத்து திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். புனிதவெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை என்பதால் திருச்செந்தூரில் கடந்த இரு நாள்களாகப் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. திருச்செந்தூா் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும் தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.