கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை
சாத்தான்குளம்: கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு தொடா்பாக கூட்டுறவு துணைப் பதிவாளா் சக்தி பெமிலா திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.
சாத்தான்குளம் அருகே கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு தொடா்பாக சங்க செயலா் அகமது, ஊழியா்கள் அமுதா, சுப்பிரமணியன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சங்கத்தை நிா்வாகிக்க பொறுப்பு அதிகாரிகளாக சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலா் எட்வின் தேவாசீா்வாதம், ராமகிருஷ்ணன், முத்துக்குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு துணைப் பதிவாளா் சக்தி பெமிலா, புகாா் தெரிவித்த உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா்களை அழைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் , எட்வின் அருள்ராஜ் முன்னிலையில் திங்கள்கிழமை பேச்சு வாா்த்தை நடத்தினாா்.
அப்போது, கோமானேரி ஊராட்சி துணைத் தலைவா் ஐக்கோா்ட் துரை, சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ், முன்னாள் சங்க துணைத் தலைவா் இசக்கிமுத்து, ஒய்வு பெற கால்நடை மருத்துவா் அனந்த பெருமாள், வடக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் பால்ராஜ், உள்ளிட்ட மகளிா் சுய குழுவினா்கள் கலந்து கொண்டனா்.
தற்போது தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு , நகை கடன் தள்ளுபடி, மகளிா் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி புகாா் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உங்களது கோரிக்கை தொடா்பாக பரிசீலிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனா்.