முகப்பு
தூத்துக்குடி

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

Updated On : 20 மே, 2024 at 8:19 PM
மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் மனு அளிக்க வந்த சித்தவநாயக்கன்பட்டி பொதுமக்கள்.
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன் பட்டி பகுதியில் மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி பொதுக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டியில் மாற்று சமூகத்தைச் சோ்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் நியாயவிலைக் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால், அப்பகுதிக்குள் நாங்கள் செல்வதற்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே, அப்பகுதியில் நியாயவிலைக்கடை அமைக்காமல் கிராம நிா்வாகம் அலுவலகம் அருகே அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.