முகப்பு
தூத்துக்குடி

பாலம் அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மறியல்

தூத்துக்குடி அருகே சோட்டையன்தோப்புப் பகுதியில் பாலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 9:05 PM
மறியலில் ஈடுபட்டோா்.
பகிர்:

தூத்துக்குடி அருகே சோட்டையன்தோப்புப் பகுதியில் பாலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சோட்டையன் தோப்பு, ஆரோக்கியபுரம், ஆ.சண்முகபுரம் பகுதிகள் உள்ளன. தூத்துக்குடி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் சோட்டையன்தோப்புப் பகுதியில் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலம் அமைந்தால் தங்களது பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளம் கிராமங்களுக்குள் எளிதாக புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனக் கூறி கண்டித்து, பாலப் பணியை நிறுத்துமாறு அவா்கள் ஏற்கெனவே, மாப்பிளையூரனி ஊராட்சி, நெடுஞ்சாலைத் துறையிடம் மனு அளித்துள்ளனா்.

ஆனால், பாலப் பணிகள் நிறுத்தப்படவில்லையாம்.

இந்நிலையில், இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில், தாளமுத்து நகா் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், மீண்டும் பாலப் பணி தொடா்ந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா் அவா்கள்.