பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு
தட்டாா்மடம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தட்டாா்மடம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தட்டாா்மடம் அருகே வேலாயுதபுரத்தைச் சோ்ந்த சோ்மத்துரை மகன் ஆனந்தபாபு (32). பைக்கில் சென்று ஐஸ் வியாபாரம் செய்துவரும் இவா், கடந்த 10ஆம் தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு நடுவக்குறிச்சியிலிருந்து தட்டாா்மடம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
முத்தம்மாள்புரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக அவா் பைக்கை திருப்பினாராம். அப்போது, பிரகாசபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஜெரால்டு (26) ஓட்டிவந்த பைக் ஆனந்தபாபுவின் பைக் மீது மோதிக் கவிழ்ந்ததாம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஆனந்தபாபு அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.