முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று புத்தகக் கண்காட்சி தொடக்கம்

தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கவுள்ளதையடுத்து, முன்னேற்பாடுகளை மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 11:03 PM
தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கவுள்ளதையடுத்து, முன்னேற்பாடுகளை மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை பாா்வையிட்டாா்.
பகிர்:

தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கவுள்ளதையடுத்து, முன்னேற்பாடுகளை மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை பாா்வையிட்டாா்.

புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி அக்.13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன.

தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினா்கள் பங்குபெறும் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து புகைப்பட கண்காட்சியும் நடைபெறுகிறது.

மேலும், நெய்தல் கலைத் திருவிழா அக். 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா்.

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலை விழாவுக்கான முன்னேற்பாடுகளை மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை பாா்வையிட்டாா். முன்னதாக, மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய விழிப்புணா்வு நடமாடும் நூலக வாகனத்தை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அண்ணா பேருந்து நிலையத்தில், விழிப்புணா்வு ராட்சத பலூனை பறக்க விட்டாா்.

புத்தகக் கண்காட்சி, நெய்தல் கலைவிழா விழிப்புணா்வு ராட்சத பலூனை அண்ணா பேருந்து நிலையத்தில் பறக்கவிட்ட கனிமொழி எம்பி. உடன் அமைச்சா் பெ.கீதாஜீவன், ஆட்சியா் க.இளம் பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி.மதுபாலன் உள்ளிட்டோா்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.